2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ரிஷாட்டை ஏன் விசாரிக்க முடியவில்லை?’

Editorial   / 2019 மே 20 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துவாரக்ஷான் 

சமீபத்தில், குளியாபிட்டியில் இடம்பெற்ற பிரச்சினையைத் தீர்க்கச்​ சென்ற ​ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை விசாரிக்க முடியும் என்றால், தற்போது, ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வைத்து, அவரை ​ஏன் விசாரிக்க முடியாது என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட ​அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் கேள்வியெழுப்பியுள்ளார்.  

ஹட்டனிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அலுவலகத்தில், நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும், பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாகக் கூறிய அவர், எனினும், இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டவர்களிடம் இதுவரைக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.  

இந்நிலையில், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரரேரணைக்கு, சு.கவின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .