2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘லயன்களை ஒழிப்பதே இலக்கு’

ஆ.ரமேஸ்   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் தனிவீட்டுத் திட்டத்தின் கீழ், வீடுகளை நிர்மாணிக்கும்போது, லயன்கள் உடைக்கப்பட வேண்டும் என்றும், ‘தோட்டம்’ என்ற வார்த்தை ஒழிந்து, கிராமம் என்ற முகவரிக்கு, பயனாளிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே, தமது இலக்கு என்றும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தனி வீட்டுத் திட்டத்தின் கீழ், நுவரெலியா மூன்பிலேன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,  

பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள், தரங்குறைந்தவை, ஒழுங்கற்றவை என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் பயனாளிகளின் மேற்பார்வையின் கீழே, வீடமைப்புப் பணி முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.  

முறையான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்காத பட்சத்தில், அது தொடர்பில் முறையிடும் வாய்ப்புப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.  

பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளிக்கும்போது, குறித்த வீட்டின் குறை, நிறைகள், வினவப்பட்டு பயனாளிகள் வழங்கிய உறுதிமொழிக்குப் பின்பே வீடுகள் கையளிக்கப்படுகின்றன என்றும் ஆறு மாததத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் நிகழ்கிறதா என்பதை அவதானித்து, அது தொடர்பில் பயனாளி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .