2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வருடாந்த திருவிழா

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெய்யன்  

பன்வில ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வருடாந்தத் தேர்த்திருவிழா, 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறவுள்ள இத்திருவிழாவில், இன்று (15), திருவிளக்குப் பூஜையும் 16ஆம் திகதி புஷ்பாஞ்சலி திருவிழாவும், 17ஆம் திகதி கற்பூரச் சட்டி திருவிழாவும், 18ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும், 19ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.  

20ஆம் திகதியன்று, காலை பால்குட பவனியும் சங்காபிஷேகமும் நடைபெற்று, அதைத் தொடர்ந்து, பறவைக் காவடியும் தீமிதிப்பும் நடைபெறவுள்ளது. மகேஸ்வரப் பூஜையையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை, வசந்த மண்டபப் பூஜையும் இரவு இரதோற்சவமும் நடைபெறவுள்ளது. 

21 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் தைப்பூச திருவிழாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று, இந்து இளைஞர் பேரவையினரின் ஏற்பாட்டில், பூங்காவனத்திருவிழா நடைபெறும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .