2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வழிகாட்டல் பதாதையை செப்பனிடுமாறு கோரிக்கை

செ.தி.பெருமாள்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதண்ணி நோட்டன் பிரிட்ஜ் பாலத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல் பதாதையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல் முறைகள் அழிந்துள்ளதால், அவ்வீதி வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள், பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரச் சபையால், குறித்த பதாதை, நோட்டன் நகரிலுள்ள விமல சுரேந்திரத் தடுப்பணைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதாதை வைக்கப்பட்டு நீண்ட காலமாவதால், பதாதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல் முறைகள் அழிந்துவிட்டன.

ஹட்டன், டிக்கோயாவுக்கும் சிவனொளிபாத மலை, மஸ்கெலியாவுக்கும் செல்வதற்கான வழிமுறைகள், பதாதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் அழிந்துள்ளதால், வாகன சாரதிகள், பாதை மாறிச் சென்றுவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சிவனொளி பாதமலை பருவகாலத்தில் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள், இவ்வாறான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பயணிகள் மற்றும் யாத்திரிகர்களின் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக, வீதி அபிவிருத்தி அதிகாரச் சபை, குறித்த இடத்தில் மீண்டுமொரு புதிய வழிகாட்டல் பதாகையை வைப்பதற்கு முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .