2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’வீட்டுக்கு வீடுச் சென்று மக்களின் பிரச்சினையை தீர்க்கும் அயகம பிரதேச செயலகம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, அவர்களுக்கு வினைத்திறனுள்ள சேவைகளை வழங்கும் திட்டத்தை, அயகம பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இப்பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் 21கிராம சேவகர் பிரிவுகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கிணங்க பிரதேச மக்களின் காணிப்பிணக்குகள், தேசிய அடையாள அட்டை வியாபார பதிவுகள், முதியோர், அங்கவீனர் நலன்புரி நடவடிக்கைகள், போதைவஸ்து பாவனையைத் தடுப்பதற்கான  ஆலோசனைகள், நிவாரணங்கள் முதியோர் அடையாள அட்டை வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு குடும்ப நலன்கள் சுகாதார வசதிகள் தொழில்வாய்ப்புக்கள் பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் சிறுவர், பெண்கள் நலச்சேவைகள் போன்ற தகவல்களை சேகரி த்து இவற்றினால் கஷ்டப்படும் கிராம மக்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேற்படி கிராமங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை பொதுமக்கள் நேரடியாக கஷ்டப்படும் இவ்வாறான பிரச்சினைகளை இனங்கண்டு அம்மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் நிரஞ்சன் எஸ்.விஜயரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .