2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வெசாக் பண்டிகை சோபை இழந்தது’

Editorial   / 2019 மே 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன்  

 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, வெசாக் பண்டிகை சோபை இழந்துள்ளதாகத் தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ப. திகாம்பரம், வெசாக் தினத்தை வரவேற்கும் நிலையில் மக்கள் இல்லை என்றும் தெரிவித்தார். 

தமிழ்- சிங்கள புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடிய மக்கள், ஒரு வாரத்திலேயே சோகத்தில் மிதக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்றுக் கொண்டிருப்பதாகவும் சாடினார்.  

எனவே, “வெசாக் பண்டிகையை கொண்டாடும் புனித தினத்தில், நாட்டில் இனங்களுக்கிடையில் சாந்தி, சமாதானம், சௌஜன்யம் நிலவவும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திப்போம்” என்றும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .