2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹாலி - எல குடிநீரில் மனித, மிருகக் கழிவுகள்

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலி-எலை சுகாதார சேவை பிரிவால் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மாதிரிகளில்,  நூற்றுக்கு 78 சதவீதமான நீரில்,  மனித, மிருகங்களின் கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது என, ஹாலி-எலை சுகாதார சேவை பிரிவின் நிர்வாக அதிகாரியான பொது சுகாதார சேவை உத்தியோகத்தர் டி.டீ.கலுபோவில தெரிவித்தார்.

ஹாலி-எலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசிய நீர் வடிகால் வேலைத்திட்டத்தால் விநியோகிக்கப்படும் குடிநீர், சுத்தமாகவும் மனித பாவனைக்கு ஏற்பவும் இருந்து வருவதாகவும் எனினும், பெருந்தோட்டங்களின் நீர் ஊற்றுக்களிலிருந்தும் ஏனைய சமூக நீர் விநியோகத்திட்டங்களிலில் இருந்தும் விநியோகிக்கப்படும் நீரிலேயே, மேற்படி மனித, மிருக கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

அந்த வகையில், 12 நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

குடிநீரை சுத்தப்படுத்த, நீருக்கு குளோரின் போடப்பட்டாலும் ஆறு மணித்தியாலங்களுக்குப் பின்னரே, குடிநீர் சுத்திகரிக்கப்படுகின்றன என்றும் இதற்கான வசதிகள் போதுமானளவில் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆகவே, இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, சுத்தமான குடிநீரை விநியோகிக்கும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .