2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொதுமக்களிடம் கருத்துக் கோரல்

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள், அவற்றுக்கான நுகர்வோர் தொடர்பிலான பிரச்சினைகள் மீதான கருத்துகளை அனுப்புமாறு, பொதுமக்களிடம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இக்கருத்துகள், இப்பிரச்சினை மீதான ஒழுங்குறுத்துகை நெறிமுறைகளை உருவாக்க உதவும். இலங்கையில் மின்சார மோட்டார் வாகனங்களின் பதிவானது, 2014ஆம் ஆண்டில் 90ஆக இருந்தது. அது 2015ஆம் ஆண்டில் 3,238ஆக உயர்வடைந்துள்ளது. 2011-2016 ஆண்டு காலப்பகுதியில், இவ்வகை வாகனப் பதிவானது, அண்ணளவாக 4,349ஆக அமைந்துள்ளது. அனைத்து பிரதான நகரங்களையும் உள்ளடக்கியதாக, தனியாருக்குச் சொந்தமான 50 மின்வாகன மின்னேற்ற நிலையங்கள், இலங்கையில் இயங்குகின்றன. இவை பொருத்தமான சட்டப்பின்னணி இல்லாததால், ஒழுங்குறுத்துகை செய்யப்படாமல் உள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக, பொதுமக்களும் பங்காளர்களும், தங்களது கருத்துகளை அனுப்பவும்.

“இதற்கமைய, அதிகாரமளிக்கப்பட்ட மின்வழங்குநர்களிடத்து, ஒரு பதிவேட்டைப் பேணிப் பதிவேற்றம் செய்வதற்கான தேவை, இவ்வகை மின்னேற்ற நிலையங்களுக்கான பயிற்சிக் கோவை, இறுதி நுகர்வோர்களுக்கான வரித்தீர்வை ஆக்கம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நியமங்கள், இந்த நிலையங்களின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் கடமைகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், வதிப்பிட மின்னேற்ற வசதிகளுடன் தொடர்பான பிரச்சினைகள் போன்ற விடயப்பரப்புகள் மீது, அக்கருத்துகள் இருப்பது விரும்பத்தக்கது.

“ஆலோசனை ஆவணத்தின் வரைவானது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.pucsl.gov.lk), மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

“தபால் மூலமாகவோ (மாடி-06, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இல.28, புனித மைக்கிள்ஸ் வீதி, கொழும்பு 03), தொலைநகல் (011- 2392641) மூலமாகவோ, மின்னஞ்சல் (consultation@pucsl.gov.lk) மூலமாகவோ அல்லது இணையத்தள வழி மூலமாகவோ, எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதிக்கு முன்னர், கருத்துகளை வழங்கலாம்.

“மேலும், வாய்மொழிமூல கருத்து வழங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ள ஆணைக்குழு, அதுபற்றிய விவரங்களை கூடிய விரைவில் அறிவிக்கும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .