2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

31க்கு முன் வரி செலுத்துவோருக்கு விசேட கழிவு

Editorial   / 2018 ஜனவரி 21 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

 

“வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆதனவரி செலுத்துவோரில், தங்களது ஆதனவரியை ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு வருட மொத்த வரியில் 10 சதவீத கழிவு வழங்கப்படும்” என, வலிகாமம் மேற்கு பிரதசசபை செயலாளர் ச.சந்திரமவுலி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“1987 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேசசபைகள் கட்டளைச் சட்டத்தின் 141 முதல் 146 பிரிவுகளின் கீழ் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, மீள் மதிப்பீடு செய்யப்பட்ட அசைவற்ற ஆதனங்கள் தொடர்பான விவரங்கள் 02.12.2016ஆம் திகதிய இலங்கை வர்த்தமானிப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டு, மக்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளது.

“இதன்பிரகாரம், 2018ஆம் ஆண்டுக்கான ஆதன வரியை, சுழிபுரம், சங்கானை, வட்டுக்கோட்டை, அராலி ஆகிய உபஅலுவலகங்களில் செலுத்தி சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வரியிறுப்பாளர்களை கேட்டுக் கொள்கின்றேன். 

“மேலும், ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் வரி செலுத்துவோருக்கு, வருட மொத்த வரியில் 10 சதவீத கழிவு வழங்கப்படும். ஒவ்வொரு காலாண்டுக்கும் உரிய வரியை அந்தந்தக் காலாண்டின் முதல் மாத முடிவுக்குள் செலுத்துவோருக்கு காலாண்டு வரியில் 5 சதவீத கழிவு வழங்கப்படும்.

“குறித்த காலாண்டுக்குள் அக்காலப் பகுதிக்கான கட்டணம் செலுத்தத்தவறின் தண்டப்பணமும் அறவிடப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன். 

“மேலும் எமது சபையின் எல்லைக்குள் ஆதனங்களைக் கொள்வனவு செய்பவர்களும் ஏற்கெனவே ஆதன உடைமையைக் கொண்டு எமது ஆதன இடாப்பில் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளாதவர்களும் எமது உபஅலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு, பெயர் மாற்றத்தை மேற்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .