2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அனுமதி பெற்றே அமைக்க வேண்டும்’

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

“பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டடங்கள் அமைத்தல், புதுப்பித்தல், திருத்த வேலைகள் செய்தல் என்பன பிரதேச சபையின் அனுமதிப் பெற்றே அமைக்கப்பட வேண்டும்” என, பருத்தித்துறைப் பிரதேசசபை செயலாளர் சிவப்பிரகாசம் சிறிபாஸ்கரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“பருத்தித்துறை பிரதேசசபையின் அனுமதியின்றி சபை எல்லைக்குள் அரச, தனியார் கட்டடங்கள், மதில், மலசலகூடங்கள், கிணறுகள் என்பவற்றை அமைத்தல், புதுப்பித்தல், திருத்தவேலைகள் செய்தல் என்பன சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

“பருத்தித்துறை பிரதேசசபையால் விநியோகிக்கப்படும் கட்டட விண்ணப்பப்படிவத்தின்  மூலம் விண்ணப்பம் செய்து, சபையின் முன் அங்கிகாரம் பெறப்படாது கட்டப்படும் கட்டடங்கள் யாவும் எதுவித நட்டஈடும் வழங்கப்படாமலும் முன்னறிவித்தல் வழங்கப்படாமலும் சபையால் அகற்றப்படும். அத்துடன், தண்டமும் அறவிடப்படும்.

“ஏற்கெனவே அனுமதிப் பெற்று ஒரு வருட காலத்தில்  கட்டடம் கட்டி முடிக்கப்படாத பட்சத்தில், மேலும் கால நீடிப்பு அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதிப் பெற்று கட்டடம் கட்டி முடிக்கப்பட்டமை தொடர்பாக அலுவலகத்தில் அறியத்தந்து உரிய அமைவுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“மேலும், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டடங்கள் தொடர்பில் உரிய நேரத்தில் பிரதேசசபைக்கு அறியத்தந்து பிரதேச அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கு வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .