2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபவனி

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி மாபெரும் நடைபவனியொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைபவனிக்கு சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் மாணவர்களால் ஆதரவு கோரப்பட்டுள்ளது.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் இன்று (08) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் நடைபவனி பற்றி அறிவித்ததோடு, அனைத்து தரப்பினரின் ஆதரவையும் கோரினார்.

நாளை செவ்வாய்க்கிழமை (09) காலை 6 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவனி, கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை இடம்பெறவுள்ளதாகவும், தமிழ் மக்கள் அனைவரும் அதற்கான ஆதரவை நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .