2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஊழலற்ற உத்தியோகஸ்தர்களாக மாற்ற வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம்’

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு மாகாணத்தில் உள்ள உத்தியோகஸ்தர்களை, இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாமல்  சேவையாற்றுகின்ற உத்தியோகஸ்தர்களாக மாற்ற வேண்டும் என்பதே வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் நோக்கமாக உள்ளதென, வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

'இலஞ்சம்' மற்றும் 'ஊழல்' இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல் எனும் கருப்பொருளில், மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்றுக் காலை நடைபெற்ற கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில் முழுமையாக இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வட மாகாணத்தினை புதிய ஆளுநர் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

முழுமையாக எல்லா இடங்களிலும் அமுல்படுத்துவதற்கு முன் அரச நிறுவனங்களில் இலஞ்ச, ஊழலை இல்லாமல் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதலில் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த பயிற்சியை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதலாவதாக குறித்த பயிற்சி நெறி மன்னாரில் இடம்பெற்றதோடு, தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழல் பலரிடம் இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்த அவர், சிலரிடம் இருந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இலஞ்ச ஊழல் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகளை காலத்துக்கு காலம் அரசாங்கம் உருவாக்கி இலஞ்சம், ஊழலை இல்லாது ஒழிக்க வேண்டுமென்று முயற்சி எடுத்தாலும், பல்வேறு சம்பவங்கள் பாதிவாகிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலஞ்சம் ஊழல் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதற்காக இதற்கான விழிர்ப்புணர்வை திணைக்கள தலைவர்களுக்கு கொடுத்து அவர்கள் மூலம் அந்த திணைக்களத்தில் உள்ள ஏனைய அலுவலகர்களை இலஞ்சம் ஊழல் இல்லாத சேவையாற்றுகின்ற உத்தியோகஸ்தர்களாக மாற்ற வேண்டும் என்பதே வடமாகாண ஆளநர் சுரேன் ராகவனின் நோக்கமாக உள்ளதெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .