2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 102 ஆவது பிறந்த தினம் தினம் இன்று (18) யாழில் கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ்.எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக 102 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றது.

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி அவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். சமூகசேவையாளர் மா.கருணாமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தனது சொந்த நிதியில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வறியமக்கள்,மாற்றுதிறனாளிகள்,பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஆடைகள், சிறு தொகை பணம் என்பவற்றையும் வழங்கிவைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .