2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கிவிட்டனர்”

Editorial   / 2018 ஜனவரி 17 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

“மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தம்மை ஒதுக்கிக்கொள்கின்றார்கள். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, அடுத்த  பொங்கலுக்குத் தீர்வு கிடைக்குமென்றார்.

ஒவ்வொரு பொங்கலுக்கும் அடுத்த பொங்கலுக்குத் தீர்வு வரும் என கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதையே எதிர்வரும் பொங்கலுக்கும் அவர் சொல்வார். இவ்வாறு தான் சுமந்திரன் ஏக்கிய இராச்சியத்துக்கு, ஒருமித்த ஆட்சி என கூறுகின்றார். ஒற்றையாட்சியையே தமிழ் மக்களுக்கு கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சி செய்கின்றார்கள்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .