2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

‘நாடகங்களைத் தவிர்த்து காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.  

கேப்பாப்புலவு மக்களின் போராட்டமானது, சுமார் 06 மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தகைய நிலையில் இப்போராட்டங்கள் உரிய தரப்பாரின் அக்கறைக்கு எட்டப்படாமல் இருப்பது எமது மக்களது துரதிஷ்டவசமான நிலைமையாகும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

எமது மக்களது காணி, நிலங்களை விடுவிப்போம் என, வாக்குறுதிகள் வழங்கி, எமது மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்தவர்களும், அவர்கள் ஆட்சி அமைப்பதற்காக அதே வாக்குறுதியை வழங்கி எமது மக்களின் வாக்குகளைப் பெற்று உதவி செய்து, அரசியல் பதவிகளைப் பெற்றவர்களும் இன்று ஆளுக்காள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாடகங்களை கைவிட்டு, எமது மக்களது காணி, நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக இல்லை. எமது மக்களுக்கு அவர்களது காணி, நிலங்களே தேவையே அன்றி, வெறும் அறிக்கைகளும், மேடைப் பேச்சுக்களும் அல்ல.  

எனவே, வெறும் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு எமது மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களது காணி, நிலங்களை விடுவித்துக் கொடுப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

எமது மக்களது பிரச்சினைகள், தேவைகளைத் தீர்க்காமல் வெறும் பதவிகளை மாத்திரம் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதால் அது எமது மக்களுக்கு எவ்விதமான பயனையும் தரப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X