2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிர்வாகத் தெரிவைக் கோரி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ். வலி. கிழக்கு வட பகுதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்மதி கிளைக்கு, கிளைக் குழு நிர்வாகத் தெரிவை நடாத்தக் கோரி, அப்பகுதி மக்கள், வட மாகாண சபை முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டத்தில், நேற்று (28) ஈடுபட்டிருந்தனர். வட மாகாண சபையின் அமர்வு நேற்று (28) இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே மேற்படி போராட்டம் நடைபெற்றது.

வலி. கிழக்கு வட பகுதி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தால், இவ்வாண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற இயக்குநர் சபை கூட்டத்தின் தீர்மானத்தின் மூலம், கிளை அந்தஸ்து வழங்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்ட வளர்மதி கிளைக்கு இதுவரை கிளைக்குழு நிர்வாகத் தெரிவுக்கான தேர்தல் நடாத்தப்படவில்லை.

சங்கத்தின் கிளைக் குழுக்கான தேர்தல் நடைபெறவேண்டிய காலத்தை கடந்து ஐந்து மாதங்களாகியும் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் தேர்தல் நடாத்துவதற்கு ஏன் தயங்குகின்றார்?

இவ்விடயத்தில் யாழ்.மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளரே பொருத்தப்பாடற்ற காரணங்களை முன்வைத்து எமது கிளைக்கு தேர்தல் நடாத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக நம்பகமாக அறிகின்றோம். இவ்வாண்டு மே மாதம் 5ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.வி க்னேஸ்வரனால் கூட்டுறவு அமைச்சருக்கு இவ்விடயம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

30 ஆண்டுகளுக்கு மேலாக கிளைக்குழு நிர்வாகம் இன்றி எமது கிளையுடன் நான்கு கிளைகள் இயங்கி வருகின்றன. பதவிக்கு வந்த எந்த நிர்வாகமும் எமது கோரிக்கையை செவிமடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த நிர்வாகமும் அதன் தலைவரும் இக்கிளைகளுக்கு உரிய ஒழுங்கின்படி கிளை அந்தஸ்து வழங்கினார். இதனால் தெரிவு செய்யப்பட்ட இத்தலைவரையும் ஆணையாளர் புதிய தலைவர் ஒருவரை நியமனம் செய்ததன் மூலம் தூக்கி எறிந்துள்ளார்.

எனினும், பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த மக்களாகிய நாம் நிர்வாக திறனை வளர்த்து புதிய தலைமைகளை உருவாக்குவதற்கு ஒரு ஆரம்ப நிலையமாக கருதக்கூடிய கிளைக்குழு நிர்வாகத்தில் பங்கேற்று கொள்வதற்கும் கிளையை சிறப்பாக நடாத்துவதற்கும் எமது கிளைக்கு விரைவாக தேர்தல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .