2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நிலைமை மோசமடைந்தால் பதவியைத் துறப்பேன்’

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு எட்டு மாதங்களாகியும் பழுதடைந்த ஒரு மின்குமிழை கூட மாற்றிக் கொடுக்க முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக, நல்லூர் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கடசி உறுப்பினர்  வி.கே.குவானந்தன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபையின் 8ஆவது அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் சபை உறுப்பினர் சு.விஜயகுமாரன், மின்குமிழ்கள் பொருத்துவதற்கு இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பிரேரணை ஒன்றை சபையில் கொண்டுவந்தார். இந்த பிரேரணை தொடர்பான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்துரைக்கையில், சபையின் செயலாளரின் கட்டுப்பாட்டில் சபை இயங்கிய போது மிகவும் வினைத்திறங்கவும் வேகமாகவும் இயங்கியதாகவும் ஆனால் சபையை தாம் பொறுப்பேற்ற பின்னர் சபையில் எந்த முன்னேற்றமும் இல்லையெனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமது பிரதேசங்களில் மின்விளக்குகள் பொறுத்த வேண்டிய தேவைகள் ஏற்பட்ட போது செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொருத்தி தந்திருந்தாரெனத் தெரிவித்த அவர், ஆனால் இப்போது சபை ஆரம்பிக்கப்படட நாளில் இருந்து இன்றுவரை மின்விளக்கு பொருத்துவது தொடர்பாகவே பேசிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமது வட்டார மக்கள் நாளாந்தம் மின்விளக்கு பிரச்சினையை எமக்கு தெரியப்படுத்தி பொருத்த வலியுறுத்துகின்றனரெனவும் அதனை பொருத்திக் கொடுக்க முடியவில்லையெனவும் தெரிவித்த அவர், ஒரு பழுதடைந்த மின்குமிழ்களை எட்டு மாதங்களாக பொருத்திக் கொடுக்க முடியவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

அப்படியானால் தாம் மக்கள் பிரதிநிதி என ஏன் இங்கு வந்துள்ளடளதாகக் கேள்வியெழுப்பிய அவர், மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை பெற்றக்கொடுக்க முடியாவிடடால் எனக்கு இந்தப் பதவி தேவையில்லையெனவும் குறிப்பிட்டார்.

இனிவரும்  அமர்வுகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்தால், தான் பதவி விலகுவதை தவிர வேறு தெரிவு இல்லையென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .