2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்துக்கு வந்த ஐயப்ப அடியாருக்கு அனுமதி மறுப்பு

எம். றொசாந்த்   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயப்ப சுவாமி விரதம் கடைப்பிடிப்போர், விரத நெறிமுறைகளுக்கு அமைய கறுப்பு உடை அணிந்து வருவோர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்களால் அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமையவே, இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐயப்ப அடியார்கள் 60 நாள்கள் விரதம் கடைப்பிடித்துவருகின்றனர். அந்த நெறிமுறைகளுக்கு அமைய, அவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிவதுடன், கறுப்பு நிறமான சால்வையை கழுத்தில் சுற்றி கால்களில் செருப்பின்றி இந்த விரதத்தைப் பின்பற்றுகின்றனர்.

ஐயப்ப அடியார் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக  திறந்த மன்றில் முன்னிலையாகியுள்ளார். அவரின் ஆடைகள் தொடர்பில் கண்டித்த நீதிமன்றம், அவரை மன்றைவிட்டு வெளியேறுமாறு பணித்தது.

அத்துடன், நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்து இவ்வாறான நபர்களை, நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் மன்று கட்டளையிட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .