2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றவருக்கு கடூழியச் சிறை

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (22) உத்தரவிட்டார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றத்துக்காகவே, இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.

பொலிஸார், குறித்த நபரை தேடி வந்ததுடன், கைது செய்வதுக்கு பொதுமக்களின் உதவியையும் நாடியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு வானில் கொழும்பு சென்ற போது, குறித்த நபர், வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .