2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பங்குனித் திங்கள் உற்சவம்: 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கத் தீர்மானம்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்களில் இரு வாரங்களுக்கு பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைப்பதற்கு தென்மராட்சிப் பிரதேச செயலகம், சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலடைந்து வரும் நிலையில், தற்போது அம்மன் கோவில்களில் இடம்பெற்று வருகின்ற பங்குனித் திங்கள் உற்சவம் காரணமாக, நோயின் தாக்கம் பரவலடையக்கூடும் என்ற அச்சத்தில், இம்முடிவு எட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (18), தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பொங்கல் நிகழ்வு, அன்னதானம் ஆகியன செயற்பாடுகள் தடை செய்யப்பட்டிருக்கும் அதே வேளையில், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் குறுகிய நேரத்துக்குள் வழிபாட்டை மேற்கொண்டு விட்டு வீடு திரும்ப முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இவற்றை கண்காணிப்பதற்கு, கோவில்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வீடுகளில் நடத்தத் தீர்மானித்துள்ள நிகழ்வுகள் அனைத்தையும் இரு வார காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும், குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடருமானால், இந்நிலை இரு கிழமைகளுக்கு மேலாக நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .