2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பொருள்களை அதிக விலைக்கு விற்றால் குற்றம்’

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

கொரோனா தொற்று எனும் ஒரு பதற்ற சூழ்நிலை நிலவும்போது, வர்த்தகர்கள் பொருள்களை அதிக விலைக்கு விற்றால், அந்த வர்த்தகர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களென, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான கூட்டமொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (18) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பருப்பின் விலையை அரசதலைவர் 65 ரூபாயாக விலை நிர்ணயம் செய்துள்ளாரெனவும் அதேபோல் ரின் மீனின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறதெனவும் கூறினார்.

அதை மீறிச் செயற்படுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களெனத் தெரிவித்த அவர், இது சம்பந்தமாக தாம் நுகர்வோர் அதிகார சபைக்கு அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஏற்கெனவே தாம் அறிவித்திருப்பதாகவும் கூறினார்.

அதேபோல், “கூட்டுறவுத் திணைக்களத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அறிவித்தல்களை வழங்க இருக்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .