2024 மே 08, புதன்கிழமை

பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு காணி வழங்கல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு பிரதேச செயலகத்தால் காணி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் இயங்கி வரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாருக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான காணி ஆவணம் தெல்லிப்பளை பிரதேச செயலரால்  காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டது

காங்கேசன்துறை - மத்தி (J/234) கிராம அலுவலர் பிரிவில் ஏற்கனவே பொலிசாரின் பாவனையிலுள்ள 1.14 ஏக்கர்  காணியானது நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலரால்  உத்தியோகபூர்வமாக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தற்பொழுது தனியார் வீடுகளில் இயங்கிவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்குப் புதிய கட்டடம் அமைப்பதற்காக தெல்லிப்பளையில் 8 பரப்பு காணியும் பலாலி பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பலாலியில் 1 ஏக்கர் காணிக்கான ஆவணம் கடந்த மாதம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X