2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மனித எச்சங்கள் மீட்பு: நேரடி விசாரணை முன்னெடுப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக, மல்லாகம் நீதவான் சம்பவ இடத்துக்கு, நேற்று (12) நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

அச்சுவேலி - பத்தமேணி சூசையப்பர் வீதியில், வியாழக்கிழமை (11) மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது, அந்தக் கிடங்கில் இருந்து மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து, அச்சுவேலி பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்படதை தொடர்ந்து, அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று சம்பவ இடத்துக்கு மல்லாகம் நீதவான் ஏ.ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்படி, நேற்று மேலும் அகழ்வுகளை மேற்கொண்ட போது, மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. கால், கை, விரல் மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்து.

இந்நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளன.

மேலும் மின்சார கம்பம் நாட்டும் பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.

அத்துடன்  மேலதிக விசாரணைகளை, அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .