2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மன்றுக்கு அழைத்துவரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (05) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் அறையை உடைத்து, கஞ்சா திருடியக் குற்றச்சாட்டில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவ​ரில் இருவரே, இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

எனினும், 2 மணிநேர தேடுதலின் பின்னர், அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் கைதுசெய்துள்ளனர்.

இதன்பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, மூவருக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வழங்கப்படும் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்தார்.

அதுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .