2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டில் வேதன உயர்வு’

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.என்.நிபோஜன் 

“வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டில் இருந்து 2,000 ரூபாய் வேதனம் அதிகரிக்கப்படும்” என, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். 

நேற்று (09) மாலை நடைபெற்ற யாழ்ப்பாணம், ஏழாலை திவ்யா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

“முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வட மாகாண சபையால் வழங்கப்படுகின்ற வேதனம் என்பது மிக சொற்பமானதே. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரமாக அவை நிச்சயம் இருக்கமாட்டாது என்பதை நாம் அறிவோம். இருப்பினும், மாகாண சபையால் பாரியளவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனத்தை உயர்த்த முடியாத நிதி நெருக்கடியில் தற்போது வடக்கு மாகாணசபை உள்ளது.  

“உங்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கு மத்திய அரசாங்கம் மாகாணத்துக்கு பணத்தை ஒதுக்குவதில்லை. இருப்பினும், உங்களது உயரிய சேவையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு தொடக்கம் 2,000 ரூபாய் வேதன அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக வட மாகாண சபையின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருக்கிறது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .