2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு; சந்தேகநபர்கள் கைது

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு முன்னால், நேற்று  (08) உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பொலிஸாரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், மல்லாகத்தில் வைத்து, நேற்று  (08) இரவு கைதுசெய்யப்பட்டுளளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 30 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களெனவும், இவர்கள், “கனி குழு” எனும் வன்முறைக் கும்பலை சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்களிடம் இருந்து, வாள்கள் - இரண்டு, கைக்கோடரி - ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் – இரண்டு, ஓட்டோ – 1  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்குமூலத்தில் பதுங்குமிடம் முற்றுகை:

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பிரதான சந்தேக நபரான மருதனார் மடத்தைச் சேர்ந்த ஜெகன் என்றழைக்கப்படும் கைலாயம் என்பவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தமது பதுங்குமிடமாக பயன்படுத்திய நீர்வேலி - கரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

அவ்வீட்டில், சோதனை மேற்கொண்ட பொலிஸார், வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் இருந்தும்  கைக்குண்டு - ஒன்று, வாள்கள் - மூன்று, மோட்டார் சைக்கிள்கள் - இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த வீட்டில் இந்தே, இக்கழுவினர் வாள் வெட்டுக்களை  மேற்கொள்ள தயாராகிச் செல்வதாக, பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .