2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை காணிகள் விடுவிப்பு

Editorial   / 2019 ஜூலை 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்குப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

வலிகாமம் வடக்கு - காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைச் சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார்க் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்பகட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பங்குபற்றலுடன், நேற்று (04) ஆரம்பமாகின.

இந்த 62 ஏக்கர் காணிகளை, நான்கு வலயங்களாகப் பிரித்து, அவற்றை அளந்து, அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள், நேற்றும் இன்றும், திங்களன்றும் (08) இடம்பெறவுள்ளதுடன், இப்பிரதேசத்துக்குள் தமது காணி உள்ளவர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலாளரைத் தொடர்பு கொள்வதனூடாக, தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், ஆளுநர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .