2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மாடு அறுத்து விற்பனை; ஒருவர் கைது

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், மதுரங்குளி புழுதிவயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாடு அறுத்து விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டின் கீழ் நபரொருவர், இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், புத்தளம், அட்டவில்லு, கொட்டுக்கச்சிய, அதுல்கொட போன்ற பிரதேசங்களில் இருந்து மாடுகளைத் திருடி, லொறியொன்றின் மூலம் பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து அறுத்து இறைச்சிக்காக விற்பனை செய்து வந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது, அங்கு இருந்த மேலும் இருவர் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அனுர குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சுற்றிவளைப்பின் போது அறுப்பதற்குத் தயாராக இருந்த 5 மாடுகளும், விற்பனை செய்வதற்கு அறுக்கப்பட்ட மாடு ஒன்றின் இறைச்சியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சட்டவிரோத மாடு அறுக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்யவும், மாடு ஏற்றுவதற்கு பயப்படுத்தப்பட்ட லொறியைக் கைப்பற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .