2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

HSBC கிரெடிட் கார்ட் வழங்கும் ‘Hunger Busters’

Editorial   / 2018 மே 28 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஜூன் 30க்கு முன்னர் HSBC VISA Platinum Cashback கிரெடிட் கார்ட்டுக்காக விண்ணப்பித்து, அதனை முதல் தடவையாகப் பயன்படுத்துவோருக்கென விசேட ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை HSBC ஆரம்பித்துள்ளது. இதன்படி, புதிய வாடிக்கையாளர்கள் 2018 ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலத்துக்குள்  தாம் விரும்பும் எந்தவொரு பிரபல உணவகத்திலும் ஒரு தடவை இலவசமாக விருந்துண்ணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.   

 தற்போதய வாடிக்கையாளர்களும் நாட்டிலுள்ள தமக்குப் பிடித்தமான உணவகம் ஒன்றில் உணவுண்பதற்கு 50% வரையான விலைக்கழிவைப் பெறுவார்கள். எரிபொருள் மற்றும் சுப்பர் மார்க்கட் செலவுகள் தொடர்பில் அவர்களுக்கு வழமையாக வழங்கப்படும் 10% தள்ளுபடிக்கு மேலதிகமாகவே இந்த விலைக்கழிவு வழங்கப்படுகிறது.   

 HSBC கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் மெக்டொனல்ட்ஸ், டொமினோ, கே.எப்.சி ஆகிய உணவகங்களில் ஒரு ரூபாய் போன்ற மிகக் குறைந்த செலவிலும் உணவுண்ணும் சலுகையைப் பெறுவார்கள். அத்துடன், பிரத்தியேகமாக வெள்ளிக்கிழமைகளில் மங்கோ ட்ரீ, ஜக் ட்ரீ, கிங்ஸ்பரி-ஹாபர் கோர்ட், இன்டியன் சமர், TSUKIJI UOICHI மற்றும் மவுன்ட் லவெனியா ஹொட்டேலின் சீஃபூட் கோவ் உணவகம் ஆகியவற்றில் Cardholder Dines Free சலுகையை அனுபவிக்கலாம்.   

 வாரத்தின் ஏனைய சகல நாட்களிலும் சைனீஸ் ட்ரகன் கபே, சப்வே, சான்ட்விச் .பக்டரி, கிரேட் வோல் ரெஸ்டூரன்ட், செமொன்டு-ஓல்ட் டச் ஹொஸ்பிட்டல், ஜஸ்மின் சோங், த படிங்கடன், Re.Pub.Lk, த வீ.யூ.-நீர்கொழும்பு, த சேல், கலம்பு கோர்ட் ஹொட்டேல், சிஸில்ஸ், ஸ்பைஸ் லவுஞ்ச்-வீரவில ஆகிய உணவகங்களில் அவர்கள் 25% வரையான தள்ளுபடிகளுடன் உணவுகளைப் உண்டு மகிழலாம்.  

வாடிக்கையாளர்கள் இக் கார்ட்டைச் சமர்ப்பித்து கீல்ஸ் சுப்பர், லாவ்ஸ் சுப்பர், ஆர்பிகோ சுப்பர் சென்டர், கூட்டுறவுச் சங்கக் கடைகள், SPAR, சதோச, கார்கில்ஸ் பூட் சிற்றி உள்ளிட்ட சகல சுப்பர் மார்க்கட்களிலும் 10% பண மீளளிப்புச் சலுகையைப் பெறுவார்கள். உங்கள் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும்போதும் பணத்தைச் சேமிக்கலாம். நாடெங்கிலுமுள்ள Ceypetco, Lanka IOC மற்றும் Laugfs GAS நிலையங்களில் 10% கொடுப்பனவை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .