2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

HUAWEI 7nm chipset தொழில்நுட்பம் அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“The Ultimate Power of Mobile AI” என்ற தலைப்பில், IFA 2018 நிகழ்வில் பிரதான உரையை ஆற்றிய HUAWEI Consumer Business Groupஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரிச்சார்ட் யு, மொபைல் செயற்கை நுண்ணறிவியலின் அடுத்த பரிணாமத்தைக் கொண்டு வரவுள்ள Kirin 980 என்ற system on a chip (SoC) ஐ அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

Taiwan Semiconductor Manufacturer Company (TSMC) எனும் தாய்வான் உற்பத்தி நிறுவனத்தின் 7nm நடைமுறையின் கீழ் உலகின் முதலாவது வர்த்தக ரீதியான SoC தயாரிப்பாக அமைந்துள்ள Kirin 980, மிகச் சிறந்த வகுப்பு பெறுபேற்றுத்திறன், செயற்திறன், இணைப்பு அம்சங்கள் மற்றும் Dual NPU AI processing power ஆகிய இணைப்புக்களின் சிறப்பைக் கொண்டுள்ளது.   

இந்த விடயம் தொடர்பில், HUAWEI CBG இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரிச்சார்ட் யு கருத்து வெளியிடுகையில், “கடந்த ஆண்டில் Kirin 970 மூலமாக சாதன செயற்கை நுண்ணறிவின் (On-Device AI) வாய்ப்பை உலகுக்குக் காண்பித்த நாம், இந்த ஆண்டில் மிகச் சிறந்த செயற்கை நுண்ணறிவு ஆற்றல்களின் சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது, அதிநவீன மூல செயற்றிறனையும் பாவனையாளர்களுக்கு வழங்கும் முழுமையான மற்றும் சகல ஆற்றல்களும் பொருந்திய வலு நிலையத்தை நாம் வடிவமைத்துள்ளோம். முற்றிலும் புதிய CPU, GPU மற்றும் Dual NPU ஆகியவற்றைக் கொண்டுள்ள Kirin 980 ஆனது அடுத்த தலைமுறை உற்பத்தித்திறன் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கு வலுவூட்டுகின்ற அறுதியான இயந்திரமாக காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.

ஆகவே, HUAWEIஇன் பிரதான சாதன உற்பத்திகளுக்கு வலுவூட்டுகின்ற 10nm Kirin 970 SoC ஆனது விரைவில், தனது 7nm மூலமாக ‘அதிநவீனம்’ என்ற நிலைக்கு மாற்றம் காணவுள்ளது.   

முன்னிலை வகிக்கும் chipset ஐ உருவாக்குவதில் HUAWEI நீண்ட, சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. அண்மைய கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், ஏனைய உற்பத்தியாளர்கள் 20nm நடைமுறைக்கான chip களை வடிவமைத்திருந்த சமயத்தில் HUAWEI ஆனது முதன்முதலாக Kirin 950 உடனான 16nm chip ஐ வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .