2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

Huaw ei Y5 Prime 2018 இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2018 ஜூலை 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei தனது வர்த்தகநாமத்தின் கீழான அடிப்படை மொபைல் தொலைபேசி வர்க்கத்தின் கீழ் மற்றுமொரு புதிய தொலைபேசி உற்பத்தியான Y5 Prime 2018 திறன்பேசியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய Huawei Y5 Prime 2018 அலைபேசி Android Oreo 8.1.0 வடிவ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், பல்புள்ளித் தொடுகை உணர்திறன் முழுத்திரையுடன் (multiple-point touch-sensitive screen) வெளிவந்துள்ளது.  

கட்டுபடியாகும் வகையில் பல்வேறு வகையான திறன்பேசிகளைப் பெற்று, உபயோகிக்கும் அனுபவத்துக்கான வாய்ப்பை அனைவருக்கும் வழங்கும் வகையில், தமது விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுக்கும், மற்றும் எந்தவொரு திறன்பேசி ஆர்வலருக்கும் அவற்றைக் கிடைக்கச் செய்யும் நோக்கத்தை Huawei தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

FullView முழுத்திரையுடன் அறிமுகமாகின்ற முதலாவது அடிப்படை மட்ட திறன்பேசியாக Huawei Y5 Prime 2018 மாறியுள்ளது. மெல்லிய, குறைந்தபட்ச சட்டகத்துடன் பொருந்தும் வகையில் அதியுயர் முழுத்திரை-மேற்பாகம் இடையிலான விகிதத்துடன் 5.45” HD+ (1440 x 720) முழுத்திரையைக் கொண்டுள்ளதால், பாவனையாளர்கள் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்வதுடன், தமது முழுத்திரையினூடாக அதிகளவான உள்ளடக்கங்களை காட்சி மூலமாக கண்டுகளிக்க முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.  


அதனுடன் இணைந்து, 13MP பின்புற கமெரா மற்றும் செல்ஃபி வெளிச்சம் (Selfie toning flash) கொண்ட 5MP முன்புற கமெரா ஆகியவற்றையும் Y5 Prime கொண்டுள்ளதுடன், படங்களை நீங்கள் மிகவும் நேர்த்தியாக வசப்படுத்த உங்களுக்கும் உதவும் வகையில் accelerometer proximity sensor மற்றும் ambient light sensor மற்றும் HDR post-processing ஆகிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

பாவனையாளர்கள் படங்களை மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் வசப்படுத்த இவை இடமளிக்கின்றன. இச்சாதனம் 3020 mAh பட்டரியைக் கொண்டுள்ளது. மின்வலு திறனை வழங்கும் chipset ஆனது Quad core A53 உடன் வெளிவருகின்றது.

உங்களது கரங்களில் நீங்கள் உங்களுக்கு வேண்டியதை இலகுவாகக் கொண்டிருக்கும் வகையில் 2 SIM அட்டைகள் மற்றும் ஒரு மைக்ரோ SD அட்டை (256 GB வரையான) என மூன்று அட்டைகளுக்கான நுழைமுகங்களை இச்சாதனம் கொண்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .