2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

IITஇன் பட்டமளிப்பு விழா

Editorial   / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

Informatics Institute of Technology (IIT), தனது 24 ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் BMICH இல் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், ஐக்கிய இராஜ்ஜியத்தின் University of Westminster பல்கலைக்கழகத்தால் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகத் துறைகளில் உலகளாவில் அங்கிகரிக்கப்பட்ட பட்டங்கள், மேற்பட்டங்களை 200 இற்கும் மேற்பட்ட IIT மாணவர்கள் பெற்றுள்ளனர். Master of Science in Advanced Software Engineering, Bachelor of Engineering (Honours) in Software Engineering, Bachelor of Science (Honours) in Computer Science, Bachelor of Science (Honours) in Information Systems ஆகிய துறைகளில் தமது கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு, வர்த்தக முகாமைத்துவப் பட்டங்கள் இவ்விழாவில் வழங்கப்பட்டன.

University of Westminster (UOW) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், முதல்வருமான Dr. Peter Bonfield பட்டங்களை வழங்கினார். நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட, இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார, தனது வாழ்க்கையில் தடைகளைத் தாண்டி எவ்வாறு முன்னேறினார் என்பதையும் வெற்றியை எட்டுவதற்கு விடாமுயற்சியின் முக்கியத்துவம் தொடர்பில் உத்வேகமளிக்கும் உரையையும் ஆற்றியிருந்தார். University of Westminster பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தர் Prof. Alex Hughes, இணை முதல்வர் Prof. Stephen Brookhouse ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், IIT பணியாளர்கள், பெற்றோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .