2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

Raffles படைப்பாக்கத்திறன், வணிக கற்கைகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணிக நிர்வாக கற்கைநெறியை ஆரம்பித்துள்ள Raffles Sri Lanka, தற்போது மாணவர்களுக்கு படைப்பாக்கத்திறன் மற்றும் வணிக கற்கையை ஒரே கூரையின் கீழ் முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.  

வணிகத்துறையில் சமூக மற்றும் தொழில்தர்ம பொறுப்புக்களை நிர்வகித்தல், பகுப்பாய்வுத் திறன்கள், போட்டித்திறன் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகிய தொழில்சார் ஆற்றல் கொண்டவர்களை உருவாக்குவதே இந்த வணிக கற்கைநெறியை Raffles அறிமுகப்படுத்தியமைக்கான நோக்கமாகும். 

திறன்மிக்க வணிகத்துறை தலைவர்கள் மற்றும் அதிகாரிகளாகத் திகழ்வதற்குத் தேவையான படைப்பாக்கத்திறன் மற்றும் இக்கட்டான நிலைமைகளை கையாண்டு, தீர்வு காணும் திறன்களை விருத்தி செய்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்குப் புறம்பாக, அவர்கள் தன்னம்பிக்கை கொண்ட மற்றும் முழுமையான ஆற்றல் கொண்ட எதிர்கால தலைவர்களாக மாறும் வகையில் அவர்களை வளர்ப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.  

“Raffles College of Design and Business (RCDB) வழங்கும் வணிகக் கற்கைநெறியானது வணிக அறிவியலின் நடைமுறை அம்சங்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்கள் வணிகத்துறையை கோட்பாட்டு மற்றும் ஆராய்ச்சி ஆகிய கோணங்களில் கற்றுக்கொள்வது மட்டுமன்றி, சந்தை யதார்த்தம் மற்றும் விரும்பிய வணிக இலக்குகளை எவ்வாறு அடையப்பெறுவது என்பதையும் கற்றுக்கொள்வர். படைப்பாக்கத்திறன் மற்றும் பகுப்பாய்வுச் சிந்தனை ஆகியனRaffles வழங்கும் கற்றல் நடைமுறையில் பாரிய பங்கு வகிக்கும்” என்று Raffles College of Design and Business கல்லூரிப் பணிப்பாளரான ஜொஹான்ஸ் சிலபன் குறிப்பிட்டார்.   

இந்த வணிக கற்கைநெறி,Raffles College of Higher Education வழங்கும் டிப்ளோமா அல்லது மேம்பட்ட டிப்ளோமா முறையில் முன்னெடுக்கப்பட முடியும். டிப்ளோமா கற்கைநெறியானது மாணவர்களை சிறப்பு வணிகத்துறைகளில் மேம்பட்ட டிப்ளோமாவிற்கான நுழைவுத் தகைமைக்கு தயார்படுத்தும் வகையில் 6 மாதங்களில் பூர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு அறிமுக கற்கைநெறியாக அமைந்துள்ளது. 

12 மாதங்களுக்கான மேம்பட்ட டிப்ளோமா கற்கைநெறிகள் தொழில்முயற்சியாண்மை மற்றும் சிறு வர்த்தகத் தொழிற்பாடுகள், உல்லாசத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், விநியோகச் சங்கிலி மற்றும் பண்ட இடப்பெயர்ச்சி தொழிற்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் டிப்ளோமா தகைமையை வழங்குகின்றன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .