2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அழகியல் திறன்களுக்கு களம் அமைக்கும் Sarvodaya Finance

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

Sarvodaya Development Finance Ltd, சிறுவர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்கும் அழகியல் செயலமர்வொன்றை பத்தரமுல்ல Ape Gama வளாகத்தில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

புகழ்பெற்ற மலேசிய ஓவியரான லிம் ஜி யுவான், இலங்கையின் மூத்த ஓவியரான தேசமான்ய ஜெயசிறி சேமகே ஆகியோர் இத்துறை சார்ந்த தமது அனுபவங்களைப் பகிர்ந்து, பங்குபற்றிய இளம் சிறார்களுக்குத் தனித்துவமான அனுபவத்தை வழங்கியிருந்தனர்.  

சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரும், தலைவருமான கலாநிதி ஏ.ரீ. ஆரியரட்ணவின்  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், Sarvodaya Development Finance (SDF) இன் பணிப்பாளர் சபைத் தலைவரான சன்ன டி சில்வா, SDF இன் பணிப்பாளரான கலாநிதி வின்யா ஆரியரட்ன, SDF இன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளரான சமிந்த ராஜகருணா மற்றும் SDF இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான தர்மசிறி விக்கிரமதிலக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.  

 நாடளாவிய ரீதியில் ஓவியத்தில் ஆர்வமுள்ள, வளர்ந்து வரும் இளம் ஓவியர்களை வளர்க்கும் ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கும் வகையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ‘Pancha Dinana Siththara’ என்ற பெயரில் நாடளாவிய ரீதியிலான ஓவியப் போட்டியொன்றை Sarvodaya Finance தனது சிறுவர் சேமிப்புக் கணக்கான ‘Pancha’ மூலமாக முன்னெடுத்திருந்தது.

பிராந்திய ரீதியாகவும், தேசிய மட்டத்தில் இரு கட்டங்களாக இப்போட்டி நடாத்தப்பட்டதுடன், மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் (4 முதல் 6, 7 முதல் 10 மற்றும் 11 முதல் 14) நாட்டின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் 1,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதற்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அவற்றின் மத்தியிலிருந்து 150 ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டன. அந்த 150 மாணவர்களும் அவர்களுடைய ஓவியங்களும் Ape Gama வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, புகழ்பெற்ற மலேசிய ஓவியரான லிம் ஜி யுவான், தேசமான்ய ஜெயசிறி சேமகே ஆகியோர் அவற்றின் மத்தியிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று வெற்றியாளர்கள் வீதம் ஒன்பது வெற்றியாளர்களைத் தெரிவு செய்தனர்.  

 150 இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்குப் புறம்பாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளைச் சார்ந்த மேலும் 100 சிறுவர்கள் லிம் ஜி யுவான் அவர்களால் நடாத்தப்பட்ட விசேட ஓவிய செயலமர்வில் பங்குபற்றுபற்றுவதற்காக அழைக்கப்பட்டனர்.

அறங்காவலர் சபையின் அங்கத்தவரும், சிறுவர் உரிமைகளுக்கான ஆலோசகருமான கலாநிதி திருமதி. சரிகா மாரசிங்க, இச்செயலமர்வில் பங்குபற்றி, சிறுவர்கள், அனைத்து திறமைகளையும் கொண்ட முழுமையான மனிதர்களாக வளர்வதற்கு, உதவுவதற்கு முழுமையான அபிவிருத்திப் பாதையை அவர்களுக்கு வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘21ஆம் நூற்றாண்டில் சிறுவர் தலைமைத்துவம் மற்றும் சிறுவர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் ஆழமான விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் விரிவுரை ஒன்றையும் ஆற்றினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .