2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆங்கில பாட ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த British Council நடவடிக்கை

Editorial   / 2018 மார்ச் 18 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஆங்கில மொழிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மற்றுமொரு புதிய செயற்றிட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளதாக British Council அறிவித்துள்ளது.   

உயர் கல்வியைப் பயில்வதிலும், தனியார் துறையிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பிக்கும் தரத்தை மேம்படுத்துவதனூடாக சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான வழியேற்படுத்திக் கொடுப்பது இந்தத் திட்டத்தின் இலக்காக அமைந்துள்ளது.   

ஆங்கில மொழிக்கான ஆசிரியர் கல்வித் திட்டம் (TEE), இலங்கையில் British Council முன்னெடுக்கும் ஆங்கில ஆசிரியர் கற்பித்தலில் மேம்பாட்டை ஏற்படுத்தும் திட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கும் என்பதுடன், நிபுணத்துவ மேம்பாடு மற்றும் ஆளுமை விருத்தி ஆகியவற்றை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இரு திட்டங்களும், British Council இன் TRANSFORM கல்வி நிகழ்ச்சியின் கீழ் அமைந்துள்ளன. TEE திட்டத்தினூடாக நாட்டின் பெருமளவான ஆங்கில மொழி ஆசிரியர்கள் மற்றும் பயிலும் நிலையிலுள்ள ஆசிரியர்கள் இலக்காகக் கொண்டு, 14 மாத காலப்பகுதிக்கு கற்கைநெறி முன்னெடுக்கப்படும். 2019 ஏப்ரல் மாதம் இந்த கற்கைநெறி நிறைவடையும்.

முதல் கட்டத்தில் கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தேசிய கல்லூரிகளில் இணைந்துள்ள 1,000 பயிலல் நிலையிலுள்ள ஆசிரியர்கள் இந்தக் கற்கைநெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.   

ஆறு British Council பயிற்றுவிப்பாளர்கள் இதற்காக ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

அவர்கள் மேற்படி நான்கு கல்லூரிகளிலும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தத் திட்டம் ஆரம்பமாகியிருந்தது. இந்தப் பயிற்றுவிப்பாளர்கள், கல்லூரியின் பீடத்துடன் இணைந்து கருமமாற்றுவதுடன், இந்தக் கல்லூரிகளில் வழமையாகப் பின்பற்றப்படும் பாடவிதானங்களையும் பின்தொடர்கின்றனர்.  

இந்தக் கல்லூரிகளில் பயிலும் ஆங்கில மொழி பயிலுநர் ஆசிரியர்களுக்கு 120 மணித்தியால இணைந்து ஆங்கில மொழி மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை தொடர்பில் பயிற்சிகளை வழங்குவார்கள். இதனூடாக ஆசிரியர்களின் ஆங்கில அறிவு மட்டம் A2 இலிருந்து B1 க்கு உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களின் பயிற்றுவிப்பு ஆளுமைகளை, தொடர்பாடல்களுக்கு அவசியமான உறுதியான மொழியாற்றலை பெற்றுக்கொடுக்க சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.  

British Council ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில்,“21ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி மிகவும் முக்கியமான மொழியாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகங்களில்லை. சர்வதேச பொருளாதாரத்தில் பங்கேற்க எதிர்பார்க்கும் ஒவ்வொரு நாடும், தனது ஊழியர்களை ஆங்கில மொழியில் பணியாற்றுவதற்கு பயிற்றுவிக்க வேண்டியுள்ளது. இதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துள்ளதுடன், அதன் பெறுபேறாக, British Council ஐ சேர்ந்த நாம், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், நிலைபேறான மேம்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவிகளையும் வழங்குகிறோம். இந்த மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் மேம்படுத்தப்பட்ட ஆங்கில மொழி பயிற்றுவிப்பு மற்றும் பயிலல் ஆகியன அடங்கியுள்ளன. ரிக்கி மென்டிஸ் போன்ற ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, ஆசிரியர்களாகக் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளவர்கள் மீது இந்தத் திட்டத்துக்காக முதலீடுகளை மேற்கொள்ள வந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இரு கட்ட வழிமுறையை நாம் பின்பற்றுகிறோம்: இன்றைய கால ஆசிரியர்களில் இன்றும் நாளையும் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக நீண்ட கால அடிப்படையில் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வது. இந்த நடவடிக்கையை ஏனையவர்களும் தொடர்வார்கள் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .