2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆசிய கடன் வழங்கும் சங்கங்களின் சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நிறைவு

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆசிய கடன் வழங்கும் சங்கங்களின் சம்மேளனத்தின் (ACCU) வருடாந்த மாநாடு (ACCU Forum 2017) கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அதற்கான இணை அனுசரணையை சணச பொது சங்கம் வழங்கியிருந்தது. அண்மையில் நடைபெற்ற அங்குரார்ப்பண விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அன்றைய தினம் இரவு இலங்கையின் பெருமை மிக்க அடையாளத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கின்ற வகையில்,  ‘இலங்கை இரவு’ என்ற நிகழ்வு வெகு கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்து சிறப்பித்தார்.

ஆசிய கடன் வழங்கும் சங்கங்களின் சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு, 11 ஆண்டுகளுக்கு பிறகே இலங்கையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர், 1985, 1995 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இம்மாநாடு இலங்கையில் நடைபெற்றுள்ளது. ‘கடன் வழங்கும் சங்கங்களின் ஒருங்கிணைப்பை கட்டியெழுப்புதல்’ என்பதே இம் முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும். அதன் மூலம், இலங்கையில் கடன் வழங்கும் சங்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பினை கட்டியெழுப்புவதோடு ஒவ்வொரு நாட்டு சங்கங்களுக்கிடையே வலுவானதொரு அடிப்படையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சணச உறுப்பினர்களின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதே அதன் இறுதி இலக்கு ஆகும்.

இலங்கையின் அபிவிருத்திக்கு சணச பொது சங்கத்தினால் அளிக்கப்படும் பெரும் பங்களிப்பு இங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆசிய கடன் வழங்கும் சங்கங்களின் சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்த முடிந்தமையையிட்டு தனது மகிழ்ச்சியை வெளியிட்ட சணச பொது சங்கத்தின் தலைவர் கலாநிதி பீ.ஏ.கிரிவந்தெனிய, சணச உறுப்பினர்களினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார். 23 நாடுகளைச் சேர்ந்த 420 பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந் மாநாடு சர்வதேச ரீதியாகவும் கவனத்தை பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .