2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை வங்கியில் ‘என்ரபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கருமபீடம்

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அடிப்படைப் பொருளாதார நோக்கமாகிய ‘2025இல் செல்வந்த நாடொன்று’ என்பதை நிஜமாக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ‘என்ரபிரைஸ் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய அதன் விஸ்தரிப்புக் கருமபீடம் இலங்கை வங்கி தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை (18) நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, அரச தொழில் முனைவுகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல, நிதி இராஜாங்க  அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.   

இந்நிகழ்வின்போது, நிதி அமைச்சின் செயலாளர் உட்பட நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கித்தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொணால்ட் சீ பெரேரா, இலங்கை வங்கிப் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கை வங்கி பொது முகாமையாளர் கே.பீ. செனரத் பண்டார உட்பட, வாடிக்கையாளர்கள், இலங்கை வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வை ஒத்ததாக, ‘என்ரபிரைஸ் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஜய இசுர’ கடன் திட்டத்தின் இரண்டு கடன் வசதிகளும் ‘ரிய சக்தி’ கடன் திட்டத்தின் மூன்று கடன் வசதிகளும் ஞாபகார்த்தமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.   

‘என்ரபிரைஸ் ஸ்ரீ லங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பின்வரும் கடன்களை நாடு பூராக அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

கொவி நவோதா (கம நவோதயம்)  

நன்மைபெறுவோர் - சிறிய கமக்காரர்கள் மற்றும் மத்துகம அமைப்புகள் (விவசாயச் செய்கைகளை இயந்திர மயமாக்கல்)  


ரிவிபல சவி (சூரிய வலு சக்தி)  

நன்மை பெறுவோர் - சூரிய வலு சக்தி அலகுகளைப் பொருத்துவதற்கு எதிர்பார்க்கும் தனியார் வீடுகள்  

 ஜய இசுர  

முதலாவது வகுதி - நன்மைபெறுவோர்  
வருடாந்தம் ரூபாய் 10 மில்லியனுக்கும் ரூபாய் 250 மில்லியனுக்கும் இடைப்பட்ட மொத்தப் புரள்வையும் ஊழியர் எண்ணிக்கை 5 - 50 ஐயும் கொண்டுள்ள கமத்தொழில் மற்றும் விவசாயத் தயாரிப்புகள், மீன்பிடிக் கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, மலர் பயர்ச்செய்கை, பூங்கா அமைப்பது  சம்பந்தமான கைத்தொழில்கள், தும்புக் கைத்தொழில்கள், அச்சுக் கைத்தொழில், ஆடைக்கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள், உற்பத்திகள் கைத்தொழில், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீள் பிறப்பாக்கல் வலு சக்தித் துறைகளில் ஈடுபடும் சிறியளவிலான தொழில் முயற்சியாளர்கள்.  

இரண்டாம் வகுதி - நன்மை பெறுவோர்  
வருடாந்தம் ரூபாய் 250 மில்லியனுக்கும் ரூபாய் 750 மில்லியனுக்கும் இடைப்பட்ட மொத்தப் புரள்வையும் ஊழியர் எண்ணிக்கை 51 - 300 ஐயும் கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் விவசாயத் தயாரிப்புகள், மீன் கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, மலர் பயிர்ச்செய்கை, பூங்கா அமைப்பு சம்பந்தமான கைத்தொழில், தும்புக் கைத்தொழில், அச்சுக் கைத்தொழில், சுற்றுலா வியாபாரம், கைப்பணிக் கைத்தொழில், ஆடைக்கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வியாபாரம், உற்பத்திகள் கைத்தொழில், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீள் பிறப்பாக்கல் வலுச் சக்தித் துறைகளில் ஈடுபடுகின்ற சிறியளவிலான தொழில் முயற்சியாளர்கள்.  

ரண் அஸ்வென்ன (ரண் அறுவடை)  

முதலாவது வகுதி - நன்மைபெறுவோர்  
சிறிய அளவிலான கமக்காரர் மற்றும் விவசாய அமைப்புகள், அலங்காரப்  பயிர்ச்செய்கையாளர்கள், அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் வியாபாரிகள்.  

இரண்டாம் வகுதி - நன்மைபெறுவோர்  
விவசாய, மீன் தயாரிப்பு நிறுவனங்கள்  
மூன்றாவது வகுதி - நன்மைபெறுவோர்  
வர்த்தக அளவிலான விவசாய பண்ணைகள்  

திரி சவிய (ஊக்கப் பலம்)  

நன்மைபெறுவோர் - கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள், சுயதொழி புரிவோர்.  

ரிய சக்தி (வாகனப்பலம்)  

நன்மைபெறுவோர் - பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்லும் வாகன உரிமையாளர் சங்கத்தில் குறைந்தது 06 மாதகாலப் பதிவு இருக்கும் பாடசாலை வேன் உரிமையாளர்கள்.  

சொதுரு பியச (எளில் மிகு இல்லம்)  

நன்மைபெறுவோர் - 1,000 சதுர அடிக்குக் குறைவான நில அளவைக் கொண்ட வீட்டு அலகுகள்.  

‘அரம்பும்’ (ஆரம்பம்) கடன் திட்டம்  

நன்மைபெறுவோர் - இளம் பட்டதாரிகள்  

ஹரித கடன் (பசுமைக் கடன்)  

முதலாவது வகுதி - நன்மைபெறுவோர்  
உக்கிப்போகும் மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, பண்டங்களை அடைக்கும் பொருள் உற்பத்தியாளர்கள் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்கள், சேதனப்பசளை தயாரிப்பாளர்கள்  
முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான கடன் (மீற்றர் பொருத்துவதற்கு ஆகக்கூடியது ரூபாய் 20,000)  

இரண்டாம் வகுதி - நன்மைபெறுவோர்  
சுற்றுலா சேவைகளை வழங்கும் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்கள்.  

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி கடன் திட்டம் (SME)  

நன்மைபெறுவோர் - சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .