2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘எதிர்பார்ப்பைக் கைவிடக்கூடாது’ சபுமல் கற்றுக்கொண்ட பாடம்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயந்திரங்களை கட்டியெழுப்புவதிலிருந்து, மக்களைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ‘பொன்டெரா’வின் சபுமல் திப்பெட்டுவௌ, சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் மாறியிருந்தார். பொறியியலாளரான இவர், மனித வளங்கள் துறையில் தனது தொழில் வாழ்க்கையை முன்னெடுக்க ஆரம்பித்திருந்தார்.மக்கள் மத்தியில் காணப்படும் திறமைகளை வெளிக்கொணர்வதில் தமக்குக் காணப்படும் ஈடுபாடு தொடர்பில் அவர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். இந்தச் செயற்பாடுகளை இவர் நீண்ட காலமாக முன்னெடுத்துவருவதுடன், அண்மையில் உள்நாட்டு மனித வளங்கள் செயற்பாடுகளிலிருந்து, ‘பொன்டெரா’வின் தாய்லாந்து செயற்பாடுகளுக்கான மனித வளங்கள் பணிப்பாளர் பதவிக்கு இவர் மாற்றம் பெற்றிருந்தார்.  

‘பொன்டெரா’ பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்காவின் மதிப்பிற்குரிய தலைவர் விருது 2017இன் வெற்றியாளரான, 36 வயது நிரம்பிய சபுமல், தனது வெற்றிகரமான செயற்பாட்டுக்கு தாம் கொண்டிருந்த நோக்கம், எதிர்பார்ப்பு அடிப்படையாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இளம் திறமையாளரான சபுமல், கண்டியில் தமது ஆரம்பக் கல்வியை தொடர்ந்திருந்ததுடன், பெருமளவு இலங்கை பெற்றோர்களின் எதிர்பார்ப்பான பொறியியலாளராகத் தகைமை பெற்றிருந்தார்.   

“இயந்திரங்களை கட்டியெழுப்புவது என்பது மக்களைக் கட்டியெழுப்புவதை விட இலகுவான விடயமாக அமைந்திருந்தாலும், தொழில் நிலைகளைக் கட்டியெழுப்புவது என்பது, அதீத அவாவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.உலகின் மாபெரும் இலாப நோக்கற்ற இளைஞர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்பான ‘AIESEC’ இல் அங்கம் வகிப்பதுடன், இந்த அமைப்பு இளைஞர்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில், சபுமல் எளிமையான, ஆனாலும் சக்தி வாய்ந்த நோக்கத்துக்கமைய தொழில் நிலையைக் கட்டியெழுப்புவது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.  

2004 இல், இலங்கையில் நடைபெற்ற CIMA சர்வதேச தலைவர்கள் மாநாட்டில் இம்ரான் கானை, சபுமல் சந்தித்தார். இதன்போது, இம்ரான் வழங்கியிருந்த ‘எதிர்பார்ப்பைக் கைவிடக்கூடாது’ என்பது தொடர்பான உரையில் சபுமல் அதிகளவு ஈர்க்கப்பட்டு, பொறியியலிருந்து விடுபட்டு, மனித வளங்கள் துறையில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .