2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓய்வூதியம் பெறுவோருக்கு கொமர்ஷல் வங்கி உதவி

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ள புதிய ஓய்வூதிய முற்பண கொடுப்பனவுத் திட்டத்தின் மூலம், 69 வயதுக்குக் கீழ்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் தற்போது தங்களது முன்னைய மாத ஓய்வூதியக் கொடுப்பனவின் 75 சதவீதத்தை முற்பணமாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.  

அரச ஓய்வூதியம் பெறுபவர்கள், விதவைகள், தபுதாரர்கள் என அரச ஓய்வூதியத் திணைக்களம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஓய்வூதியம் பெறுபவர்கள், இலங்கை மின்சார சபை ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் ஓய்வூதியத் தொகை மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக இருக்கின்ற போது அவற்றை கொமர்ஷல் வங்கியின் கணக்கொன்றுக்கு வைப்பிலிடப்படுமாயின், இந்த வசதிகளைப் பெற முடியும் என வங்கி அறிவித்துள்ளது.  

ஒரு தடவை இந்த வசதிக்கு விண்ணப்பித்த பின் அதற்குரிய நபர் ஆகக் கூடியது 50 ஆயிரம் ரூபாய் வரைக்குமான தொகை தேவையேற்படும்போது ஓய்வூதிய முற்பணமாகப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் கொமர்ஷல் வங்கி ATM ஊடாக டெபிட் கார்ட் ஒன்றை உபயோகித்து பணத்தைப் பெறவும் முடியும்.  

இதற்கு மேலதிகமாக தமது ஓய்வூதியப் பணத்தை கொமர்ஷல் வங்கிக் கணக்கில் வைப்பில் இடுபவர்கள் 2.5 மில்லியன் ரூபாய் வரையான தனிப்பட்ட கடனுக்கு 10 வருடங்களில் மீள செலுத்தத்தக்கதாக இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் வங்கி அறிவித்துள்ளது.  

இந்தச் செயற்பாடுகள் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க “நாட்டில் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளனர். ஓய்வூதியம் கிடைக்கும் வரை காத்திருக்காமல் அவர்களது அவசர பணத் தேவைகளுக்கு முகம் கொடுக்கத் தக்கதாக அவர்களை வலுவூட்டுவதே எமது இந்த புதிய திட்டம்” என்று கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .