2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கஸ்பர்ஸ்கி இணையத்தள பாதுகாப்பு - 2018’ அறிமுகம்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கெஸ்பர்ஸ்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஏக விநியோகத்தரான ஏவியென் டெக்னோலஜீஸுடன் இணைந்து இலங்கையில் அறிமுகமாகும் கெஸ்பர்ஸ்கி இணையதள பாதுகாப்பு 2018 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் அல்டப் ஹல்டே இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களை மேலும் ஒரு படிமுறை முன்னேற்றிப் பாதுகாக்கும் திறமையை, கெஸ்பர்ஸ்கி இணைய தள பாதுகாப்பு புதிய மென்பொருள் கொண்டுள்ளது” என்று கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல விருதுகள் பெற்ற, பாவனைக்கு இலகுவான தொழில்நுட்பம் உங்களது கணனி, மெக், அன்ரொயிட் போன் மற்றும் டெப்லட் போன்றவற்றை மிகப் புதிய வைரஸ்கள், ஸ்பைவெயார், அட்டாக்ஸ், சைபர் கிரைம் மற்றும் பல இன்னல்களில் இருந்து பாதுகாக்கிறது” என்றும் அவர் சொன்னார்.

இந்த நிகழ்வின் போது, கருத்துத் தெரிவித்த பணிப்பாளர்களான ரணில் பிரான்சிஸ்கோ மற்றும் புத்திக லியனகே ஆகியோர், “கெஸ்பர்ஸ்கியுடனான ஏவியென்னின் பயணம் வெற்றிகரமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது” என்று கூறினார்கள். இத்துறையில் மிகச்சிறந்த மற்றும் நம்பகமான சேவைகளையும், தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், புதிதாக ஏவியென் டெக்னோலஜீஸ் நிறுவனம், வேறெங்கும் காணப்படாத, வாரத்தின் 07 நாட்களும், 24 மணி நேர தொலைபேசி இலக்கம் ஒன்றை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழிற்துறை விற்பனை ஆகிய பணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நாடு தழுவிய ரீதியில் 300க்கும் மேற்பட்ட விற்பனை வலையமைப்பைக் கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவது எமக்கு மற்றுமொரு மைல் கல்லாகும்” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஒரு சாதாரண குடியிருப்பு மனையில் உள்ளவர்கள், விழித்திருக்கும் வேளையில் கணிசமான நேரத்தை ஒன்லைனில் செலவிடுகின்றனர். அதிக இணைய தள பாவனை, இணைய தளம் ஊடான இடர்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவற்றுக்குத் தீர்வாக கெஸ்பர்ஸ்கி இணைய தள பாதுகாப்புச் சேவையான anti-phishing technology தொழில்நுட்பத்தின் மூலம் போலியான ஸ்பாம் (Spam) மின்னஞ்சல்கள் மற்றும் இணைய தளங்களின் பாதிப்புக்களைத் தடுக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .