2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவித்தது யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் அணியைச் சேர்ந்த, சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தவர்களுக்கு, அண்மையில் இடம்பெற்ற யூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த விருதுகள் 2017 நிகழ்வின் போது, விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு, இந்தோனேசியா, ஜகார்தா நகரிலுள்ள கிரான்ட் மேர்கியுரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஊழியர்களை கௌரவப்படுத்தியிருந்ததுடன், களிப்பூட்டுவதாகவும், கோலாகலமாகவும் அமைந்திருந்தது.  

சாதனையாளர்களுக்கு நான்கு பிரிவுகளில் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ‘பிளாட்டினம் ப்ளஸ்’ என்பது மிகவும் உயர்ந்த கௌரவிப்புப் பிரிவாக அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து தங்கம், வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. பாங்கசூரன்ஸ் அணியைச் சேர்ந்த அங்கத்தவர்கள், வெளிப்படுத்தியிருந்த திறமையான செயற்பாடுகளின் காரணமாக, 55 அங்கத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், இதில் 16 MDRT அங்கத்தவர்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தக் கோலாகமான நிகழ்வைத் தொடர்ந்து, 43 வெற்றியாளர்களுக்கு பாலி நகருக்குச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த மனம் மறவாத பொழுதுகள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருந்தன. அணியினர் மத்தியில் மேலும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது அமைந்திருந்தது.   
கடந்த சில ஆண்டுகளில் யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் செயற்பாடுகள், பெருமளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. குறிப்பாக, 2017 சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. புதிய வியாபாரங்கள் மற்றும் பெருமளவு நிகர தவணைக்கட்டண வழங்கல்களில் அதிகரிப்புப் பதிவாகியிருந்தது.  

பாங்கசூரன்ஸ் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் சமந்த ஹேரத் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, “கடந்த ஆண்டு வியாபாரத்தில் பெருமளவு வளர்ச்சியை நாம் அவதானித்தோம். பாங்கசூரன்ஸை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தலில் நாம் வெற்றிகரமாக இயங்கியிருந்தோம். டிஜிட்டல் ஏஜென்ஸி டூல்கிட் (DAT) அறிமுகத்துடன் மற்றும் முழுமையான டிஜிட்டல் மயமான தரவு முகாமைத்துவ கட்டமைப்பினூடாக (LMS) இதை எமக்கு எய்த முடிந்தது. பணமில்லாத தவணைக்கட்டண கொடுப்பனவு கட்டமைப்பு ஒன்றையும் அறிமுகம் செய்திருந்தோம். இதனூடாகத் தவணைக்கட்டணங்களை செலுத்துவதில் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. ஜகார்தா, பாலி ஆகிய பகுதிகளில் எம்மால் இந்த வெற்றியை அனுபவிக்க முடிந்திருந்ததுடன், அவர்களின் கடுமையான உழைப்பினூடாகக் கிடைத்த சாதனைகளைக் கொண்டாடவும் முடிந்தது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .