2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுப்ரீம் செப் சமையல் கலைஞர்களுக்கிடையிலான போட்டி

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எல்.ரி. அதிரன்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் முகமாக, சுப்ரீம் செப் சமையல் கலைஞர்களுக்கிடையிலான போட்டியின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.  

அவுஸ்திரேலிய நாட்டின் நிதியுதவியில் இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து மேற்படி சுற்றுலா விருந்தோம்பல் துறையூடாக இலங்கைக்கும் இலங்கை மக்களும் அடையக்கூடிய நன்மைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவான், அவுஸ்திரேலிய தூதரக பிரதானி ஆர்.சிவசுதன், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் குழுமத் தலைவர் டேவிட் அப்லெட், குழும துணை தலைவர் கமலநாதன் ஜெயதாஸ், வூஸ்க் அமைப்பின் பிரதிநிதி எஸ்.யோகேஸ்வரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இலங்கை அரசும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து திறன் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தும் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இச் சுப்ரீம் செப் சமையல் கலைஞர்களுக்கிடையிலான போட்டி நடத்தப்படுகிறது.   

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் வலது குறைந்தோரை தொழிலாளர்களாக, உற்பத்தியாளர்களாக, முயற்சியாண்மையாளர்களாக சுற்றுலாத்துறையில் உள்வாங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .