2024 மே 10, வெள்ளிக்கிழமை

ஜூன் மாதத்தில் IPM தேசிய மனிதவள மாநாடு

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

IPM தேசிய மனிதவள மாநாடு, 2018 ஜூன் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை மற்றும் ஏழாம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “டிஜிற்றல் உலகுக்கேற்ப HR இன் மாற்றம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறும்.   

IPM இன் இந்தத் தேசிய HR மாநாடானது, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாடாகக் கருதப்படுகின்றது. இம் மாநாட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பங்கேற்பாளர்கள் 1,000 பேர்வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

IPM NHRC 2018 க்கான பிரதம விருந்தினராக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கலந்துகொள்வார்.   

இந்நிகழ்வில், தலைமை உரையை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான HSBC யின் பிரதம நிறைவேற்றதிகாரி மாரக் ஜீ. புரொதேரோ வழங்குவார். அன்றைய நிகழ்வில் பங்கேற்கவுள்ள புகழ்பெற்ற பேச்சாளர்களின் வரிசையில், கலாநிதி. கசொள யானோ  (டிஜிற்றல் மயமாக்கம் மூலம் வேலைத்தள மகிழ்ச்சி), கலாநிதி தனுஷ்க பொலேகல்ல (டிஜிற்றல் யுகத்தில் மனிதவள செயற்பாடுகளின் மாற்றம்), கலாநிதி டி. பிரசாந்த் நாயர், (மனித வளங்களில் உணரத்தக்க செயற்கை நுண்ணறிவு), திருமதி க்ளொடியா கெடேனா (டிஜிற்றல் பணிச்சூழலில் மக்களை ஒழுங்குபடுத்துதலும் வலுவூட்டலும்) ஆகியோர் மாநாட்டின் பல் தொழில்நுட்ப அமர்வுகளில் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வர். 

ஓவ்வோர் அமர்வின் பின்னருமான கேள்வி - பதில் நிகழ்வு, பார்வையாளர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அரிய சந்தர்ப்பத்தையும் பேச்சாளர்களிடம் பார்வையாளர்கள் தங்கள் சொந்தக் கேள்விகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பையும் தருகின்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .