2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்

Editorial   / 2020 மே 31 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது COVID-19 போன்ற தொற்று நோய்களினால் மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மன அழுத்தத்தின் போது நல்வாழ்வை நோக்கி பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் அதனை மேற்கொள்வதற்காக எயார்டெல் லங்கா நிறுவனம் தேசிய மனநல ஆரோக்கிய நிறுவனத்துடன் (NIMH) இணைந்து உங்களது மனநல ஆரோக்கியம் தொடர்பாக அறிவை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அறவித்துள்ளது.

இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியில் ஏற்படக் கூடிய பொதுவான மனநல பிரச்சினைகள் குறித்து நடைமுறையான புரிந்துணர்வை பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக, NIMHஇன் அனுபவங்கள் அடங்கிய மனநல ஆரோக்கிய வேலைத் திட்டத்தின் ஆலோசகர்களின் நிபுணத்துவ அறிவை பெற்றுக் கொடுக்க எயார்டெல் நிறுவனம் இலங்கையிலுள்ள இளம் சமூகத்தினருடன் உள்ள தமது வலுவான உறவை பயன்படுத்தி ஒற்றுமையின் வெளிப்பாட்டை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

“COVID-19 குறித்து மக்கள் ஆரோக்கிய பிரதிபலிப்புகளின் ஒரு அங்கமாக மனநல நல்வாழ்வை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்த இடைவெளியை புரிந்துகொண்டு, எயார்டெல்லின் ஒத்துழைப்புடன் மனநல மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தும் முறைகளை செயற்படுத்துவதற்கு அனைவரையும் தைரியப்படுத்துவதற்காக NIMH குழுவினர் அவர்களுடன் நெருக்கமாக செயற்படவுள்ளனர். இந்த தொற்றுநோய் பரவல் காலப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் தனிமையில் வாடுவோரே இதை கேளுங்கள், நீங்கள் தனியாக இல்லை. நாம் அனைவரும் இணைந்து தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது உடல் ரீதியாக தொலைவில் இருந்தாலும் ஒருவரையொருவர் தேடிப்பார்த்து தேகாரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிச் செல்வது மிக முக்கியமான விடயமாகும்“ என NIMH இன் இலங்கைக்கான பணிப்பாளர் மருத்துவர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இணைந்திருத்தல் மற்றும் பொழுதுபோக்கு

Lockdown காலப்பகுதி முழுவதிலும் எயார்டெல் நிறுவனம் தமது அனைத்து பாவனையாளர்களுக்கும் Airtel Movie Box ஊடாக இலவசமாக பொழுதுபோக்கு அம்சங்களைப் பெற்றுக் கொடுக்கின்றது. பாவனையாளர்களுக்கு 'My Airtel ' App ஊடாக 500க்கும் அதிகமான திரைப்படங்களை அவர்களது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து கொள்ள முடியும் - இது ர்னு தொழில்நுட்பத்துடன் மும்மொழிகளில் பார்க்கக் கூடிய நம் நாட்டு திரைப்படங்களையும் உள்ளடக்கிய இலங்கையிலுள்ள பாரிய வலைப்பின்னல் நூலகமாகும். பழைய திரைப்படங்களிலிருந்து புதிய திரைப்படங்கள் மட்டுமன்றி வெள்ளித் திரை வரை இந்த வலைப்பின்னல் நூலகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

E-Learning மேம்பாடு

Lockdown காலத்தில் கல்வி செயற்பாடுகளுக்காக காட்டும் ஆர்வம் தவறவிடப்படுகின்றமை கவனிக்கத்தக்க அளவில் காணப்படுகிறது, எயார்டெல் நிறுவனம் இலங்கையிலுள்ள இளம் வயதினரிடம் அவர்களது கல்வியை கைவிடாமல் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறது. Lockdown காலப்பகுதியில் எயார்டெல் பாவனையாளர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிறுவனம், முதலாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையிலான கற்றல் பயிற்சி வசதி கொண்ட கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ e-learning தளமான 'ஈ-தக்சலாவ' மற்றும் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் e-learning தளமான ' LEARN 'க்கு இலவசமாக நுழைவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

'My Airtel' Appஐ அனைத்து பாவனையாளர்களின் தேவைகளுக்கான ஒருமுகப்படுத்தப்பட்ட தளம் (One-stop Shop) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எயார்டெல் பாவனையாளர்களுக்கு வீட்டில் இருந்தவாரே 'My Airtel App' மற்றும் எயார்டெல் இணையத்தளத்தின் ஊடாக top-up, ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும். Airtel App ஊடாக வாடிக்கையாளர்களுக்கு டேட்டா bundlesகளுக்காக 25% விசேட கழிவும், 'வீட்டிலிருந்து வேலை செய்தல்' தொடர்பாக மேலதிக டேட்டா அடங்கிய டேட்டா பெக்கேஜ் மற்றும் மேலதிக போனஸ் அழைப்பு நேரம் உள்ளிட்ட பெரும்பாலான சலுகைகள் வழங்கப்படுகிறன.

இதற்கு மேலதிகமாக, இந்த காலப்பகுதியில் ரீசார்ஜ் அட்டை ஃ ரீலோட் ஒன்றை கொள்வனவு செய்ய முடியாத அனைத்து முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்காக எயார்டெல் அவசர கடன் சேவை வழங்கப்பட்டிருந்தது.

“தொற்று நோய் அதிகரித்ததுடன் lockdownஐ முதன் முதலில் அமுல்படுத்துவதற்கு ஒருமாதத்திற்கு முதலிலிருந்து சமூக தனிமைப்படுத்தல் குறித்த அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றி எமது பாவனையாளர்களுக்கு இந்த சவால் நிறைந்த காலத்தை எதிர்கொள்வதற்கு உதவியளிப்பதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். தொழில் செயற்பாட்டு நடவடிக்கைகள், கல்வி செயறபாட்டு நடவடிக்கைகள் அல்லது பொழுது போக்கு நடவடிக்கைகள் போன்ற எமது அனைத்து அன்றாட தேவைகளையும் இணையத்தளம் ஊடாக வழங்குதல் மற்றும் எம்முடன் தொடர்பில் வைத்திருப்பதற்காக இந்த கொவிட் நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நம் அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் உதவி கிடைத்துள்ளது“ என எயார்டெலின் பிரதான விற்பனை அதிகாரி, சந்திரசேகர் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .