2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பல்ஸர் டெயார் வென்ஞ்சர்

Editorial   / 2018 மே 28 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிட்டட் (DPMC) இலங்கையில் முதலாவது மோட்டார் சைக்கிள் ‘றியலிட்டி’ நிகழ்ச்சியை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அச்சமற்ற மற்றும் துணிவான பல்ஸர் பைக் ஓட்டுநர்களுக்கு திகிலான மற்றும் சாகசமான பாதையில் பைக்கைச் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைக்கவுள்ளது. இந்தப் போட்டியில் நாடு முழுவதிலுமுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பங்கெடுக்க முடியும் என்பதுடன், மோட்டார் பைக் ஓட்டும் திறன் பரிசோதனைக்கு உட்பட்டு, உடற்பலன், மூலோபாயமான சிந்தனை மற்றும் குழுவாகச் செயற்படுதல் போன்ற திறமைகளுடன் இணைந்துகொள்ள முடியும்.  

முதலாவது பரிசை வெற்றி கொள்ளும் நபரான ‘அட்வெஞ்சர் றியலிட்டி ஸ்டார்’ க்கு பல்ஸர் 200 NS மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடத்தைப் பெறுபவருக்கு, பல்ஸர் 160 NS மோட்டார் சைக்கிளும், மூன்றாவது இடத்தைப் பெறுபவருக்கு பல்ஸர் 135 LS மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. பங்குபற்றும் சகலருக்கும் பணப்பரிசு வழங்கப்படும்.  

இந்தப் போட்டிக்காக, ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வலயத்திலும் கிடைக்கும் முதல் 100 விண்ணப்பங்களும் இண்டாவது சுற்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும். ஒவ்வொரு வலயத்திலும் தெரிவுசெய்யப்படும் 10 விண்ணப்பதாரிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த 100 பேரில் சிறப்பான 15 பேர் ‘பல்ஸர் டெயார் வெஞ்சர் சலஞ்ச் 2018’ போட்டிக்குத் தகுதி பெறுவர். தெரிவுகள் யாவும் நிபுணத்துவம் பெற்ற சுயாதீன நடுவர் குழுவால் மேற்கொள்ளப்படும்.  

‘பல்ஸர் டெயார் வெஞ்சர் சலஞ்ச் 2018’ போட்டி 12 சுற்றுகளைக் கொண்டதாகவிருக்கும். சாகசம் மிக்க மற்றும் துள்ளல்கள் நிறைந்த சவாலான பாதைகளின் ஊடாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தவேண்டி இருப்பதுடன், போட்டியிடுபவர்களில் ஐந்து சிறப்பான நபர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவர்.  

தெரிவு மற்றும் வெளியேற்றச் சுற்று உள்ளிட்ட சகல நிகழ்வுகளும் வீடியோ பதிவுசெய்யப்பட்டு 12 அத்தியாயங்களாக சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் 2018 செப்டெம்பர் முதலாம் திகதிவரையான காலப் பகுதியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை இந்த றியலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சியில் இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத மோட்டார் சாகச நிகழ்ச்சியை மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் பார்வையாளர்களும் கண்டுகளிக்க முடியும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .