2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள்

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங் முன்னெடுக்கும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான ‘செனெஹசென் இதுரும்’ நடவடிக்கையினூடாக, கட்டுகஸ்தோட்டை, பண்டாரவளை, மொரட்டுவ ஆகிய நகரங்களில், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.   

உற்பத்தித்திறன் வாய்ந்த, புத்தாக்கமான கற்பித்தல் முறைகளை முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் போதிக்கும் வகையிலும், சிறுவர்களின் சேமிப்புப் பழக்கம், ஆக்கத்திறன் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பிலும் இந்தச் செனெஹசென் இதுரும் திட்டம் கவனம் செலுத்தியிருந்தது. 

நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டத்தை ‘பிலிந்து’ மாதாந்த சஞ்சிகையுடன் கைகோர்த்து முன்னெடுக்கிறது. நிபுணத்துவம், துறைசார் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்கின்றனர்.   

தனித்தும், அணியாகவும் பயிற்சி செய்வதற்கான சாதனங்கள் இந்தப் பயிற்சியின் போது பங்கேற்றிருந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.  

இந்த நிகழ்ச்சியின் போது எம்மைச் சூழ காணப்படும் கழிவுப்பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி கலை, கைவேலை செயற்பாடுகளுக்காக அவற்றை உபயோகிப்பது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், இதனூடாக சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சிறுவயது முதல் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.  

12ஆவது செனெஹசென் இதுரும் நிகழ்ச்சிக்கு பீப்பள்ஸ் லீசிங் கட்டுகஸ்தோட்டை கிளை அனுசரணை வழங்கியிருந்தது. 

கண்டியின் ‘டெவொன் ரெஸ்ட்’ பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் 82 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.  

மொரட்டுவ பீப்பள்ஸ் லீசிங் அனுசரணையில் செனெஹஸென் இதுரும் நிகழ்ச்சியின் 13ஆவது நிகழ்வு மொரட்டுவயில் 56 ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.  

14ஆவது ‘செனெஹஸென் இதுரும்’ நிகழ்ச்சி பண்டாரவளை பீப்பள்ஸ் லீசிங் கிளையின் அனுசரணையில் பண்டாரவளை ‘கன்மார்க் விடுமுறை இல்லம்’ பகுதியில் இடம்பெற்றது. இதில் 88 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .