2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புலனுணர்வு பாதுகாப்பு பயன்பாட்டில் காகில்ஸ் வங்கி பங்களிப்பு

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காகில்ஸ் வங்கி, தனது பாதுகாப்பு ஆற்றல்களை மேம்படுத்தி, கண்காணிப்பை அதிகரித்து, நவீன அச்சுறுத்தல் சம்பவங்களுக்கு எதிராக, வலுவான தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக IBM இன் புலனுணர்வு சைபர் பாதுகாப்பு தீர்வுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.   

சைபர் குற்றவாளிகள், நிதியியல் சேவைகள், தொழிற்துறை மீது அதிகமாக இலக்கு வைத்து வருகின்ற நிலையில், வாடிக்கையாளர்களைச் சிறப்பாகப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை அணுகுமுறையைக் கைக்கொண்டு, தனது தொழிற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஆற்றலை விஸ்தரிப்பதற்காக AI தொழில்நுட்பத்தை இலங்கையில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ள வங்கியாக காகில்ஸ் வங்கி மாறியுள்ளது.  

 சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து வருகின்ற நிலையில், பாதுகாப்புத் தகவலின் (கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத) அளவு மற்றும் வீதம் ஆகியனவும் தொடர்ந்தும் பன்மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் விரைவான தீர்மானங்களை எடுப்பதற்கு துல்லியமான புலனுணர்வைப் பெற்று, நவீன அம்சங்களைக் கொண்டிருப்பது பாதுகாப்பு அணிகளால் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது.

சைபர் பாதுகாப்புக்கான Watson போன்ற AI தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக மிகவும் முக்கியமான அச்சுறுத்தல்களை விரைவாகவும், துல்லியமாகவும் இனங்காணும் நடைமுறை தன்னியக்கமயமாக்கப்படுவதுடன், இதுவரை கற்பனை செய்திராத வேகமாகவும், பாரிய அளவிலும் பதிலளிப்பதற்கு பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு இடமளிக்கின்றது.  

 காகில்ஸ் வங்கியின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான ரொஹான் முத்தையா கூறுகையில், “எமது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்தும் அதேசமயம், அதிகரித்துச் செல்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் நாம் மிகுந்த சிரத்தை கொள்வதில் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.சைபர் குற்றச்செயல்கள் மிகவும் ஒழுங்கமைப்பாகவும், நவீன பாணிகளிலும் இடம்பெறுவது அதிகரித்துச் செல்லும் நிலையில், நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் உள்வாங்கல் தடுப்பு மற்றும் பதில் நடவடிக்கை ஆற்றல்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. IBM இன் மிகச் சிறந்த புலனுணர்வுப் பாதுகாப்பு உற்பத்தி வரிசை, அச்சுறுத்தல்களை முற்கூட்டியே தடுத்து, அதன் மூலமாக முன்னிலை வகிக்கின்ற டிஜிட்டல் வங்கி என்ற எமது நிலையமைப்பை வலுப்படுத்த எமக்கு உதவும்” என்று குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .