2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொறுப்புள்ள பிரஜைகளைத் தெரிவு செய்தலுக்கான Mother ஸ்ரீ லங்கா

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

Mother ஸ்ரீ லங்காவின் Run எனும் செயற்றிட்டம் மிகவும் முக்கியமான 3 கருத்துகளின் சுருக்கமாகும். பொறுப்புள்ள பிரஜை - R, ஒற்றுமை - U, தேசியபெருமை - N; இத்திட்டத்தின் மூலம் சிறுவர்கள் ஊக்கப்படுத்தப்படுவது மட்டுமல்லாது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய செயற்றிட்டத்தை உருவாக்கி, நாடு பூராகவும் சமூகத்தின் தரத்தை வலுவூட்டுவதற்கு ஊன்றுகோலாகச் செயற்படுகின்றது.

 
 2008ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 வருடங்களாக Mother ஸ்ரீ லங்கா திட்டமானது சக்தி பெற்ற ஓர் அமைப்பாக மாறி, தற்சமயம் மாகாண ரீதியான இறுதிமட்டச் செயற்றிட்டங்களை நிறைவு செய்துள்ளது.  

 மேற்படி திட்டத்தில் 2,500ற்கும் மேலான பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு, ஒவ்வொரு போட்டிக்குமான மாகாண, அகில இலங்கை ரீதியான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டனர். மாகாண ரீதியான இறுதி மட்டச் செயற்றிட்டம் அதாவது, Run 2017/18 செயற்றிட்டம் மே 4ஆம் திகதி வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.   

 தேசிய ரீதியில் இறுதிக்கட்ட போட்டி, கொழும்பில் ஆகஸ்ட் மாதமும் அதைத் தொடர்ந்து 10ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களும் நடைபெறவுள்ளன.  ஓவ்வொரு மாகாண ரீதியான போட்டிகளும் மாகாண மட்டத்திலான கல்வி அமைச்சு சார்ந்த பணிப்பாளர்களாலும் Mother ஸ்ரீ லங்கா நிர்வாகக் குழு உயர்மட்ட உறுப்பினர்களாலும் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் போது, 12- 18 வயதுடைய சிறார்கள் வியக்க வைக்கும் திறமைகளை வெளிப்படுத்தினர்.  

  மாணவர்களிடையே, இந்தச் செயற்றிட்டம் பற்றிய கருத்துகளைக் கேட்ட போது, பாரிய மாற்றம் அவர்கள் மனப்பாங்கில் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். நாடு மாற வேண்டுமானால் எம்மை முதலில் மாற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு அவர்கள் மத்தியில் தென்பட்டது.  

 Mother ஸ்ரீ லங்கா முன்னோடியின் நோக்கங்களில் ஒன்றானது பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்குதல், இதற்காகப் பாடசாலை, சமுதாயத்தில காணப்படும் பொதுச் சொத்துகள் பாதுகாத்தலுக்கு சிறார்கள் எவ்வாறு தம் பங்களிப்பைச் செய்யமுடியும் என்பதை காட்டுவதற்குரிய சிறந்த தளமாகும்.  

 Mother ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் இதுவரை 2013 இலிருந்து ஆரம்பித்த காலம் வரைக்கும் 1,400 செயற்றிட்டங்கள் அமுலாக்கப்பட்டன. மற்றும் 2013/14, 2015/16 போன்ற இரண்டு மட்ட போட்டிகள் நடாத்தப்பட்டு, 2017/18 ற்கான மாகாண ரீதியான இறுதிமட்ட போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது.  

 Mother ஸ்ரீ லங்கா இலாப நோக்கற்ற நிறுவனமாகத் திகழும் அதே வேளையில், பொதுமக்களுடன் ஒன்றினைந்து செயற்பாடுகளையும் தனியார், இலாப நோக்க அமைப்புகளையும் உள்வாங்கி கல்வி, சமூக, பொருளாதார, இலங்கையின் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்தும் ஒரு திட்டமாகத் திகழ்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .