2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் செலிங்கோ லைஃவ்க்கு புதிய கட்டடம்

Editorial   / 2018 மே 31 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ் யாழ்ப்பாணத்தின் பிரதான கிளைக்கான புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளைத் தொடங்கியுள்ளது.  

20 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக இந்த நவீன கட்டடம் அமையவுள்ளது. இலக்கம் 37, கண்ணாதிட்டி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமையவுள்ள செலிங்கோ லைஃவ்வின் இந்த இரண்டாவது யாழ்ப்பாணக் கிளையின் நிர்மாணப் பணிகள் 14 மாதங்களில் பூர்த்தி அடையவுள்ளதாகக் கம்பனி அறிவித்துள்ளது.  

கம்பனிக்கு சொந்தமான காணிகளில் செலிங்கோ லைஃவ் சுற்றாடலுக்கு இசைவான கிளைக் கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றது. அதே தரங்களைப் பின்பற்றியே இந்தக் கிளையும் அமையவுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் ஏற்கெனவே ஐந்து வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள கிளைகளின் பணிகளுக்கான பிரதான செயற்பாட்டு நிலையமாக இந்தப் புதிய கட்டடம் அமையும்.  

யாழ்ப்பாணக் கிளை ஏற்பாடு செய்திருந்த அடிக்கல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட செலிங்கோ லைஃவ்வின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.ரெங்கநாதன் அடிக்கல்லை நாட்டி கட்டடப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

செலிங்கோ லைஃவ்வை பொறுத்தவரையில், யாழ்ப்பாணம் அதிகூடிய செயற்பாடு மிக்க பிரதேசமாகத் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இரண்டாவது கிளை கட்டடம் ஒன்றில் முதலீடு செய்வதன் மூலம், கம்பனி இந்தப் பிராந்தியத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை  வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று இந்த வைபவத்தில் பேசும் போது ரெங்கநாதன் கூறினார்.  

இயற்கை ஒளியை ஆகக் கூடுதலாகப் பயன்படுத்தும் வகையில் முழுமையான சூரியசக்தி வளத்தோடு இந்தப் புதிய கட்டடம், அதிநவீன சக்தி ஆற்றல் கொண்ட ஒளி அமைப்பு வசதிகள், குளிரூட்டல் வசதிகள், மழைநீர் சேமிப்புத் திட்டம், வாகனத் தரிப்பிட வசதி என்பனவற்றைக் கொண்டதாக அமையவுள்ளது. 

கட்டடத்துக்கு மேலும் அழகூட்டும் வகையிலும் இயற்கைக்கு இசைவான போக்கை மேம்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு மாடியிலும் மர நடுகை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

இந்தப் புதிய கிளை கட்டடத்துக்கு மேலதிகமாக, செலிங்கோ லைஃவ் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சுவேலி, சாவகச்சேரி, சுன்னாகம், மானிப்பாய், நெல்லியடி ஆகிய இடங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .