2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ரண் கெகுளு’ கணக்கினூடாக 2000 புலமை பரிசில்கள்

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டில் ‘ரண் கெகுளு’ கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்திருந்தமையைக் கௌரவிக்கும் வகையில், புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் பிரதான நிகழ்வு, அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் இது போன்ற மேலும் ஒன்பது நிகழ்வுகள், மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.   

தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்றிட்டத்தின் அங்கமாக, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை,  க.பொ.த உயர் தரப் பரீட்சை ஆகியவற்றில் சித்தியெய்தும் மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கி ஊக்குவிக்கும் நடவடிக்கைககளை, இலங்கை வங்கி முன்னெடுத்து வருகிறது.

2002ஆம் ஆண்டு முதல், இந்தத் திட்டத்தை வங்கி முன்னெடுத்து வருவதுடன், ‘ரண் கெகுளு’ கணக்கு வைத்திருப்போருக்கு, இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் போது, தமது கணக்கில் 5,000 ரூபாயை மீதியாகக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இந்த விசேட திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .